அன்னை ஓர் அதிசயம் – வெற்றி தரும் செபமாலை அன்னை
மெரினா ராஜ் – வத்திக்கான்
வெற்றி நாயகனாம் இயேசுவின் தாயாம் அன்னை மரியா வெற்றிகளின் அன்னையாகத் திகழ்கின்றார். அன்னை மரியாவை, வெற்றிகளின் அன்னை என்று அழைப்பதற்கு ஒரு வரலாறும் உள்ளது. 16ம் நூற்றாண்டில், முஸ்லிம்கள், இஸ்பெயின் நாட்டின் பெரும் பகுதியை ஆக்ரமித்து, கிறிஸ்தவ ஐரோப்பாவின் பெரும் பகுதியை அச்சுறுத்தினர். இந்த அச்சுறுத்தல், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே Ionian கடல் பகுதியில், Lepanto என்ற இடத்தில் நடந்த சண்டை உண்மையாக்கியது. இந்த ஆபத்தை உணர்ந்த அப்போதைய திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், அனைத்துக் கிறிஸ்தவர்களையும், செபமாலை செபிக்குமாறு கேட்டுக்கொண்டார். கிறிஸ்தவர்கள் எல்லாரும் அன்னை மரியாவை நோக்கி உருக்கமாக செபமாலைச் செபித்தனர். கிறிஸ்தவ ஐரோப்பிய படைகள், போரில் வெற்றியும் பெற்றன. இது நடந்தது 1571ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள். இதனால், திருத்தந்தை ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், அன்னை மரியாவை வெற்றியின் அன்னை எனவும், அக்டோபர் 7ம் தேதி செபமாலை அன்னை விழா எனவும் அறிவித்தார். அக்டோபர் மாதத்தில் இருக்கும் நாம் இன்றைய நமது அன்னை ஓர் அதிசயம் என்ற நிகழ்வில் செபமாலை அன்னை குறித்துக் காணலாம்.
செபமாலை அன்னைக்கு சிறப்பான விதத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதத்தில் இருக்கும் நமக்கு வெற்றிகளின் அன்னையான் செபமாலை அன்னையின் மகத்துவத்தைப் பற்றி எடுத்துரைக்க இருப்பவர் அருள்தந்தை மரிய அல்போன்ஸ். குழித்துறை மறைமாவட்டத்தை சார்ந்த அருள்தந்தை மரிய அல்போன்ஸ் அவர்கள், 1980 ஆண்டு குருத்துவ அருள்பொழிவு பெற்றவர். பொதுநிலையினரின் பொற்காலம், இறையாட்சிக்கான இளையோர், இதயம் தேடும் இயேசு, பாஸ்கா பாதை என்பன போன்ற நூல்களைப் படைத்தவர். தற்போது சென்னை பூவிருந்தவல்லி திரு இருதயக் குருத்துவக் கல்லூரியில் இறையியல் பேராசிரியராகவும் ஆன்மிக ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார். அத்தோடு ஒவ்வொரு நாளும் திசைகள் தேடும் திருஅவை என்ற தலைப்பில் திருத்தந்தையர், இறையியலாளார்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வரும் தந்தை அவர்களை செபமாலை அன்னை பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்