தேடுதல்

திருவிழாக் கூட்டம் ஒன்றில் பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவர்கள் திருவிழாக் கூட்டம் ஒன்றில் பிலிப்பீன்ஸ் கிறிஸ்தவர்கள்  

பிலிப்பீன்சில் காற்றாலை திட்டத்திற்கு தலத்திருஅவையினர் எதிர்ப்பு!

நீர் ஆதாரத்தை காப்பாற்ற காற்றாலை திட்டத்தை பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிலிப்பீன்சில் உள்ள சமர், கல்பயோக் நகரில் வசிப்பவர்களும் குடிமைச் சமூகக் குழுக்களும் திட்டமிடப்பட்ட காற்றாலை மின் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்றும், இது கல்பயோக் பான்-ஆகிய ஹய்பான் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் நீர்நிலைகளை அச்சுறுத்துவதாகம் அவர்கள் கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.

ஜெமினி விண்ட் எனர்ஜி கார்ப்பரேஷன் (GWEC) மேற்கொண்ட இந்தத்  திட்டம், பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் 13 உட்பட 37 காற்றாலைகள் முன்மொழிகிறது என்றும், சேவ் கல்பயோக் ரிவர்ஸ் ஃபவுண்டேஷன் (SACRIFICE), மற்றும் உள்ளூர் ஆதரவாளர்கள் உண்மையான பொது ஆலோசனை இல்லை என்று கூறி, நன்கொடை மற்றும் கையெழுத்து பரப்புரையைத் தொடங்கி, 3,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துகளைச் சேகரித்துள்ளனர் என்றும் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.

காடுகள், பல்லுயிர் பெருக்கம் மற்றும் கல்பயோக்கின் முக்கிய நீர் ஆதாரத்திற்கு இந்தத் திட்டத்தின் ஆபத்து குறித்து வலியுறுத்தி, தலத்திருஅவையின் அருள்பணியாளர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுக்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது அச்செய்தி.

காடழிப்பு, மண் அரிப்பு, பல்லுயிர் இழப்பு மற்றும் நீர் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர் என்றும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளூர் சமூகங்கள் அல்லது சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள் என்றும் உரைத்துள்ளது அச்செய்தித் தொகுப்பு.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 அக்டோபர் 2025, 15:25