தடம் தந்த தகைமை – குல்தா இறைவாக்கினர் கூறிய ஆண்டவரின் வாக்கு
மெரினா ராஜ் – வத்திக்கான்
குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினரிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சார்ந்தவர்; அர்கசின் புதல்வனான திக்வாவின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி. அவர் அவர்களை நோக்கி, “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்ல வேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன். ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே, இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்; அதைத் தணிக்க இயலாது. என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்