தடம் தந்த தகைமை : தாவீது என்ன செய்தார்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
பாரும், ஓய்வுநாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட, இயேசுவோ மறுமொழியாக, தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? (மாற் 2:24&25) எனக் கேட்டார்.
அழகான இந்த உலகை ஆறு நாட்களாகப் படைத்த கடவுள் ஏழாம் நாள் அதனைத் திரும்பிப் பார்த்து நிறைவு கண்டார். படைத்ததைப் பார்த்து இரசிக்கவும் இளைப்பாறவும் செய்த நாளை ஏழாம் நாளென எடுத்தாள்கிறது திருவிவிலியம். அதை ஓய்வுநாள் (வார இறுதி நாள்) எனக் கொண்டனர். இஸ்ரயேலர் எகிப்தில் அடிமைப்பட்டுக்கிடந்த வேளையில் இந்த ஓய்வு என்பது எட்டாக் கனியாயிற்று. மோசே வழியாக விடுவிக்கப் பட்டபின் ஓய்வுநாள் சட்டமாக்கப்பட்டது. அச்சட்டத்திற்கு ஏராளக் கொம்புகளையும் கிளைகளையும் வைத்துக் களையிழக்கச் செய்தனர்.
உடல் ஓய்வுக்காக, உள்ளப் புத்துணர்வுக்காக, உழைத்த உழைப்பை எண்ணிப் பூரிப்பதற்காக, உடன் வாழ்வோருடனான உறவைப் புதுப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓய்வுநாள் காலவட்டத்தில் சட்டமாகி அது பல சங்கடங்களை ஏற்படுத்தியது. இந்த அடிமுட்டாள்தனப் போக்கைப் போக்கத் துணிந்தார் இயேசு. ஓய்வுநாளில் வயல்வெளி வழியாகச் சென்றார். அதுவும் தன் சீடர்களோடு சென்றார். அவர்களின் கதிர் கொய்தலைக் கண்டார். ஆயினும் சக மனிதரின் பசிக்குமுன் பழமையான சட்டம் கீழானதென உயர்வாக எண்ணிக் கொண்டார். பசித்தவருக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பது என்பது உயிர்
கொடுப்பதாகும்.
இறைவா! பிறரின் பசியை உணர அவ்வப்போது பசித்திருக்கும் வாய்ப்பைத் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்